Tuesday, October 2, 2018

புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்பு

உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலம் முடிவடைந்தையடுத்து,  புதிய தலைமை நீதிபதியாக  ரஞ்சன் கோகாய் பெயரினை  கொலீஜியம் பரிந்துரை செய்தது .  கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்திருக்கிறார். 

டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில்  அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்க உள்ளார். அசாம் மாநிலத்தில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி,  பிறந்தவர்  ரஞ்சன் கோகாய். அவருடைய தந்தை அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். 

இவர் கடந்த 1978ம் ஆண்டு நவம்பர் மாதம் கவுஹாத்தியில் தன்னுடைய சட்ட பணியை ஆரம்பித்தவர். 2001ம் ஆண்டு கவுஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2010ம் ஆண்டு கவுஹாத்தியில் இருந்து பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் ரஞ்சன் கோகாய்  பணியாற்றினார். 

பின்னர் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.  2012ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இன்று 46வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார் ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Classic Right sidebar ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி, SupremeCourt, Chief Justice, Ranjan Gogoi இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yiUAYj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment