சாமிடா, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் தற்போது ராணி வீரமாதேவி சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘வீரமாதேவி’ படத்தை இயக்கி வருகிறார்.
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்த படத்தின் மூலம், முதன்முறையாகத் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில், வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன் முதல்கட்டமாக கடந்த செப்.28-ம் தேதி, கர்நாடக ரக்சனா வேதிக் அமைப்பினர் வீரமாதேவி திரைப்படத்தின் போஸ்டரை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வீரமாதேவி படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பெங்களூரில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது வீரமாதேவி படத்தின் போஸ்டருக்கும் செருப்பு மாலை அணிவித்தும், போஸ்டரை எரித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் சன்னிலியோனுக்கு வலுக்கும் எதிர்ப்புகளால் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர்.
Classic Right sidebar சன்னி லியோன், வீரமாதேவி, Veeramadevi, Sunny Leone சினிமா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PmrlLp
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment