அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் நாகரிகாமகி வருவதாக, பின்னணி பாடகி சின்மயி சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக பின்னணி பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரை தான் தெரிவிப்பதால் திரைத்துறையில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை என தெரிவித்திருத்தார்.
இந்நிலையில், சின்னமயின் குற்றச்சாட்டுக்கு தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிலளித்துள்ள வைரமுத்து, அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது என்றும், அண்மைக்காலமாக தான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றுள் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்குப் புறம்பான எதையும் தான் பொருட்படுத்துவதில்லை என்றும், உண்மையைக் காலம் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
Classic Right sidebar வைரமுத்து, பாலியல் புகார், தமிழ் சினிமா, Vairamuthu, Tamil Cinema, MeToo சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OiMx8s
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment