Wednesday, October 10, 2018

இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது  டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நேரு நகரைச் சேர்ந்த அருணாச்சலம், ராமசாமி ஆகியோர் இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள், கே.என்புரத்தில் சாலையக்கடக்க முயன்ற போது, இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் இந்த விபத்தில் சாலையில் சென்ற மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Classic Right sidebar திருப்பூர், பல்லடம், Bike Accident, இருசக்கரவாகன விபத்து, Tiruppur, Palladam தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ywIN8y
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment