Thursday, October 4, 2018

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்திய பிரித்வி ஷா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயதேயான இந்திய வீரர் பிரித்வி ஷா தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் 293-வது வீரராக அறிமுகமான பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எந்தவித பதற்றமும் இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா, 99பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் அறிமுகப்போட்டியில் சதமடித்த 15-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Classic Right sidebar INDvWI, PrithviShaw, Test, Cricket, பிரித்விஷா, வெஸ்ட் இண்டீஸ், டெஸ்ட் சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NkIWBt
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment