Thursday, October 4, 2018

ப்ரித்வி ஷா குறித்து  நீங்கள் அறியாத  சுவாரசிய தகவல்கள்  !

தனது 16 வயதில் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்த சச்சின்,  கூட  நினைத்து பார்த்திருக்க மாட்டார், பின்னாளில் தான் கிரிக்கெட் கடவுளாக மாறுவார் என்று. அவரை போலவே சாதனை படிக்கட்டுகளை 14 வயதிலேயே தொடங்கிய இந்தியாவின் ப்ரித்வி ஷா பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

இளங்கன்று பயமறியாது என்ற கூற்றுக்கு உயிர் கொடுத்து வருகின்றனர் விளையாட்டு வீரர்கள். கிரிக்கெட் அரங்கில் தேசிய அணிக்கு தேர்வாவது என்பது எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அல்ல என்பது அனைவரும் உணர்ந்த ஒன்று. அப்படி கிடைத்தாலும்,  ஆடும் லெவலில் இடம் பிடிப்பது என்பது நூற்றில் ஒருவருக்கு மட்டுமே. அப்படியான வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் 18 வயதே ஆன இந்தியாவின் இளம் கன்று ப்ரித்வி ஷா. இவரை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். 

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த வயதில் அறிமுக போட்டியில் விளையாடிய 6-வது இந்திய வீரர் ப்ரித்வி ஷா. சச்சின், பியூஷ் சாவ்லா, பார்தீவ் பட்டேல், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், மனிந்தர் சிங் வரிசையில் இணைந்தார் ப்ரித்வி ஷா. 

2. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அறிமுகமான 239-வது வீரர் ப்ரித்வி ஷா. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம் இவர் இந்த வரிசையில் இணைந்தார். 

3. டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் தொடக்க வீரராக களமிறங்கிய 2வது வீரர் ப்ரித்வி ஷா. தனது 17 வயது 265 நாட்களில் இந்திய முன்னாள் வீரர் விஜய் மெஹ்ரா, நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த வயதில் தொடக்க வீரராக விளையாடினார். 

4. பேட்ஸ்மேனாக, மிக குறைந்த வயதில் இந்திய அணிக்கு விளையாடும் 2வது வீரர்  ப்ரித்வி ஷா. முன்னதாக, தன்னுடைய 16வயதிலேயே சச்சின் இந்த சாதனையை படைத்து யாரும் தகர்க்க முடியாத சிம்மாசனத்தை உருவாக்கினார். ஒட்டுமொத்தமாக இளம் வயதில் தேர்வான 4வது இளம் பேட்ஸ்மேனும் ஆவார்.

5. சர்வதேச அளவில் குறைந்த வயதில் டெஸ்டில் விளையாடிய 13வது வீரரும் ஆவார். 

6. பள்ளிகளுக்கு இடையிலான  Harris Shield கோப்பைக்கான போட்டியில் Rizvi Springfield-அணிக்கு 14 வயதில் கேப்டனாக களமிறங்கிய  ப்ரித்வி ஷா, St Francis D’Assisi அணிக்கு எதிராக 546ரன்கள் குவித்தார். பள்ளிகள் அளவிலான போட்டியில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் இவர்தான். 

7. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணி ப்ரித்வி ஷா தலைமையில் கோப்பையை வென்றது. கேப்டனாக இந்த தொடரில் 6 போட்டிகளில் இவர் 261 ரன்கள் குவித்து, ஜூனியர் உலகக்கோப்பையில் கேப்டனாக அதிக ரன் குவித்தவரானார். இதனையடுத்து முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்ட் சந்த்-க்கு பிறகு ஜூனியர் வெற்றி கேப்டன் வரிசையில் இணைந்தார் ப்ரித்வி.

8. இந்தியாவின் முதல் தர டெஸ்ட் போட்டியான ரஞ்சி தொடரில் குறைந்த வயதில் சதமடித்த 2வது இந்திய வீரர் ப்ரித்வி. இவருக்கு முன்னதாக, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் முதலிடத்தில் உள்ளார். 

9. 2018 ஐபிஎல் தொடரில் 1.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ப்ரித்வி, 9 போட்டிகளில் 245 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

10. 17 வயது 320 நாட்கள் நிறைந்திருந்த போது, துலிப் டிராபியிலும் ப்ரித்வி சதமடித்து, சச்சினுக்கு அடுத்தபடியாக, குறைந்த வயதில் சதமடித்த வீரர் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளார். 

11. அறிமுக டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சதமடித்து, டெஸ்ட் அரங்கில் குறைந்த வயதில் சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையையும் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்வசமாக்கினார். 

சச்சினை போலவே குள்ளம், சாதனை படிக்கட்டுகளில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன் பெயரை பொறித்த ப்ரித்வி, வருங்காலத்தில் சச்சினுக்கு நிகரான கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படுவாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Classic Right sidebar விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zQe2O3
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment