Monday, October 8, 2018

விஜய்சேதுபதியின் அசத்தலான கெட்டப்பில் வெளியானது 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

விஜய் சேதுபதி, தியாகராஜ குமாராஜா கூட்டணியில் வெளியாக உள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படம் சூப்பர் டீலக்ஸ். வித்தியசமான கதை களத்தை தேர்ந்தெடுத்த நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் 96 திரைப்படம் தற்போது திரையரங்குளில் வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

ஆராண்யகண்ட படத்தை தொடர்ந்து தியாகராஜ குமாராஜா இயக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

மேலும் இந்தப்படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து  இணையத்தில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

Classic Right sidebar சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி, சினிமா, Super Deluxe, Vijay Sethupathi, Tamil Cinema சினிமா சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி, சினிமா, Super Deluxe, Vijay Sethupathi, Tamil Cinema 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NsGyc5
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment