Monday, October 8, 2018

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தஜிகிஸ்தான் அதிபருடன் சந்திப்பு

தஜிகிஸ்தான் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோனை இன்று சந்தித்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. அரசியல் உறவுகள், வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவர், இளைஞர் நலன், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Classic Right sidebar Ramnath Kovind, Tajikistan, Emomali Rahmon,   இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QzW1ZS
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment