Wednesday, October 3, 2018

யார் தளபதி ஸ்டாலினா? விஜய்யா? உதயநிதி பளிச் பதில்

நடிகர் விஜயின் அரசியல் பேச்சு அனைலைக் கிளப்பியுள்ள நிலையில், ரசிகர்களால் அவர் தளபதி என்று அழைக்கப்படுவதும் முக்கிய விவாதப்பொருள் ஆகியுள்ளது. குறிப்பாக, “திரையுலகின் தளபதி விஜய் அண்ணா” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தி.மு.க தலைவராக புதியதாகப் பொறுப்பேற்றுள்ள மு,க.ஸ்டாலின் அரசியல் களத்தில் தளபதி என்று அழைக்கப்படுவார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் விஜயை தளபதி என்று அழைப்பதை தி.மு.க-வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று ட்விட்டர் தளத்தில், மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு உதயநிதி அளித்துள்ள பதில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ”திரையுலகின் தளபதி விஜய் அண்ணா... திரையுலகின் தல அஜித் சார் என்பது சரி தான்” என்று பதிலளித்துள்ளார் உதயநிதி. இந்த பதிலின் மூலம் சினிமா உலகிற்கு மட்டும் தான் விஜய் தளபதி, அந்த சினிமா உலகிலும் அஜித் தான் தலைவன் என்று மறைமுகமாக விஜயை சீண்டும் கருத்தாகவே இது பார்க்கப்படுகிறது.

Classic Right sidebar ஸ்டாலின், உதயநிதி, விஜய், சர்கார், M.K.Stalin, Udayanidhi, Vijay, Sarkar சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qrk3pQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment