Tuesday, October 2, 2018

இந்தோனிஷியாவில் மீண்டும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி...

இந்தோனேஷியாவில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர் .

இந்தோனேஷியாவில் உள்ள சம்பா தீவில் ,தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான  நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் ஆறு புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சம்பா தீவில் தேவாலயம் இடிந்து விழுந்ததில் 34 பேர் பலியானதாகவும், மேலும் 52 பேரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அந்த பகுதியில் தொடர்ந்து  மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வசித்து வரும் சம்பா தீவு பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவு சுலவேசியா தீவுக்கு தெற்கே 1,600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுக்கு தொலைபேசி மூலம் உறுதியளித்துள்ளார்.இந்த துயர சம்பவத்திற்கு தமது இரங்கலை வெளியிட்ட பிரதமர் மோடி, இருநாட்டு அரசு அதிகாரிகள் வாயிலாக இந்தியாவின் உதவிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு இந்தோனேசிய அதிபர் ஒப்புதலும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar இந்தோனிஷியா, நிலநடுக்கம், indonesia, Earthquake உலகம் இந்தோனிஷியா, நிலநடுக்கம், Indonesia, Earthquake 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y6mFlj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment