Monday, October 1, 2018

தமிழரை டூடுல் வைத்து பெருமைப்படுத்திய கூகுள்

இணைய உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், டூடுல் என்ற பெயரில் தனது முகப்பு லோகோவை பிரபலமானவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின்போது அதற்கேற்றார் போல் மாற்றியமைப்பது வழக்கம். 

அதேப்போல், இன்று தமிழகத்தின் மருத்துவரான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது புகைப்படத்தை வைத்து டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 

யார் இந்த கோவிந்தப்பா வெங்கடசாமி? இவரது பிறந்த நாளை டூடுல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்ததன் காரணம் என்ன என அறிய:-

தமிழகத்தின் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரத்தில் அக்.,01, 1918ல் பிறந்தவர் கோவிந்தப்பா வெங்கடசாமி. பள்ளிப்படிப்பை எட்டயபுரத்திலும், கோவில்பட்டியிலும் பயின்ற இவர், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். 

பின்னர் ராணுவத்தில் சேர்ந்து அரசு மருத்துவராக பல்வேறு நாடுகளில் போர் நடந்தபோது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சிகிச்சையளித்து வந்தார். கண் மருத்துவத்தில் முதுகலையும், கண் அறுவை சிகிச்சையில் முதுநிலை பட்டமும் பெற்றவர் கோவிந்தசாமி. 

1956-ல் மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட கண் மருத்துவத்துறையில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினார். பிறகு 1976ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின், மதுரையில் அரவிந்த் என்ற பெயரில் கண் மருத்துவமனை ஒன்றை நிறுவினார். தொடக்கத்தில் 11 படுக்கை வசதிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனை தற்போது நெல்லை, கோவை உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் 55 மில்லியன் மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டும் 6.8 மில்லியன் பேருக்கு கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கும் மேலானோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னமும், அந்த மருத்துவமனை இது போன்ற சேவையை செய்து வருகிறது. பல முகாம்கள் நடத்தி லட்சக்கணக்கானோருக்கு கண் மருத்துவர் பார்த்திருக்கிறார் கோவிந்தப்பா வெங்கடசாமி.

கோவிந்தப்பா வெங்கடசாமியின் மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக 1973ம் ஆண்டு இந்திய அரசின் பெருமைமிகு விருதான பத்ம ஸ்ரீ விருது அளித்து கவுரவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி மதுரையில் காலமானார். 

இன்று அவரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல தேடுபொறியான கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கோவிந்தப்பாவின் புகைப்படத்தை வைத்து அவரது மருத்துவ சேவையை போற்றும் வகையில் GOOGLE என்ற வார்த்தையின் முதல் 3 எழுத்துகளை மங்கலாகவும் அடுத்த 3 எழுத்துகளை தெளிவாகவும் வடிவமைத்து டூடுலாக கூகுள் பதிவிட்டுள்ளது.

Classic Right sidebar Google Doodle, Google, Dr. Govindappa Venkataswamy, Aravind Eye Hospital தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xR2wQX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment