Thursday, October 4, 2018

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் முறையை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் நூலகத் துறை ஊழியர்கள் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்டோ - ஜியோவினர் 100-க்கும் மேற்பட்டோர் கொட்டும் ழையிலும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

கோவில்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு  எடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் பல்லடம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.

 

Classic Right sidebar ஜாக்டோ ஜியோ, போராட்டம், Jacto Geo தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zRzKkz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment