Thursday, October 4, 2018

முதலமைச்சர் ஆகிராரா ரஜினி..?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் `பேட்ட' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 

இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது முருகதாஸ் 'சர்கார்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். விஜய்யுடன் மூன்றாவது முறை முருகதாஸ் இணைந்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 

இதற்கு அடுத்ததாக ரஜினி படத்தை முருகதாஸ் இயக்குவதாகவும், அதனை சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. ஏற்கெனவே ரஜினியின் `பேட்ட', முருகதாஸின் `சர்கார்' ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறது சன் பிக்சர்ஸ். 

ஆனால், முருகதாஸ் ரஜினிக்காக எழுதிய கதையில் ரஜினி முதலமைச்சராக ஆவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதால், இதனைத் தயாரிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. 

மேலும், ஒருவேளை சன் பிக்சர்ஸ் இதிலிருந்து விலகினால் படத்தை லைக்கா தயாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எற்கெனவே ரஜினியின் 2.0 பட தயாரிப்பு, `காலா' படத்தில் பங்கு கொண்டிருந்தது என லைக்காவுக்கும் - ரஜினி படத்திற்கும் சில பிணைப்புகள் உள்ளதால், எது வேண்டுமாலும் நடக்கலாம் என சொல்கிறது கோலிவுட் வட்டாரம். விரைவில் உண்மை நிலவரம் என்ன என்று படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

 

Classic Right sidebar முருகதாஸ், ரஜினி, A.R. Murugadoss, Rajinikanth சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zQTMLZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment