Thursday, October 4, 2018

"ரெட் அலர்ட்" என்றால் என்ன ?

தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி "ரெட் அலர்ட்" என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலில் ரெட் அலர்ட் என்றால் என்ன ? தமிழகத்தை இந்த ரெட் அலர்ட் பரபரப்பு தொற்றிக்கொள்ள என்ன காரணம் ? என்பது குறித்து விளக்குகிறது இச்செய்தி. 

கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்பை நாம்  கண்டிருந்தோம்.  அப்போது வானிலை மையத்தால் பரவலாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் "ரெட் அலர்ட்" . இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை ஒட்டி சென்னை வானிலை மையம் தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி முதல் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மழை தொடர்பான எச்சரிக்கையை வானிலை மையம் நான்கு வகையாக விடுக்கிறது. 

Green Alert, Yellow Alert,Amber Alert, Red Alert. Green Alert எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே Green Alert விடுக்கப்படும். அடுத்ததாக Yellow Alert. மிக மோசமான வானிலை இருக்கும் வேளையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதை உணர்த்துவதே Yellow Alert. 
 
பின் Amber Alert உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் இந்த ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் தெரிவிக்கிறது. இறுதியாக Red Alert மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வானிலை மையம்  
உணர்த்துகிறது. 

இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையினால் ஏற்படும் விளைவுகள் என்னவெனில் மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு போன்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கைக்கு பின் ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. இந்த சூழலில் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

Classic Right sidebar சென்னை, இடி, கனமழை, வாகனஓட்டிகள், இந்தியவானிலை, தமிழகம், கேரளா, வானிலை, chennaimeteorologicalcentre, ChennaiRains, Weather, WeatherUpdate, Rain, MeteorologicalCentre, traffic, Chennai, tnrain தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IBEUEb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment