Thursday, October 4, 2018

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைப்பு - அருண் ஜெட்லி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் 50 காசுகள் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி 1 ரூபாய் 50 காசுகளும்,  எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும் விலையை குறைக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்க வலியுறுத்தப்படும் என அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 12 சதவீதமாகவும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16 சதவீதமகாவும் சரிந்துள்ளது.

இந்த வரிக்குறைப்பின் காரணமாக மத்திய அரசுக்கு 21 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று, குஜராத்தும், மகாராஷ்டிரா மாநிலங்களும் மேலும் 2ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளது.

இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நடவடிக்கை நள்ளிரவு  12 மணிமுதல் அமலுக்கு வரும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar டெல்லி, Delhi, crude oil, Petrol Diesel Price, கச்சா எண்ணெய் விலை, அருண் ஜெட்லி, கலால் வரி, arun jaitley இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DWsW9g
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment