ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 12 லட்சத்து 26 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஊழியருக்கும் 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது. 2017 - 2018 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளத்தை கணக்கில் கொண்டு 78 நாட்கள் போனசாக வழங்க மத்திய அரசுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது.
தற்போது, மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 2,000 கோடி ரூபாய் செலவாகும். 80 நாட்கள் போனசாக அறிவிக்க ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar ரயில்வே ஊழியர்கள், போனஸ், மத்திய அமைச்சரவை, Cabinet, Railway இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CzL07D
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment