Monday, October 8, 2018

நீ டான்னா, அப்போ சச்சின் யாரு... சோகிப் அக்தாரை கதறவிட்ட நெட்டின்சன்கள்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தரின் டிவிட்டை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப்  அக்தரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரவல்பண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோகிப் அக்தர் வீசிய பந்துவீச்சு உலகிலேயே அதிவேகமாக வீசப்பட்டதாகும். இவரது அசுரவேகத்தில் சிக்கி பல நாட்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து உள்ளனர். 1997ம் ஆண்டு கிரிக்கெட் களத்தில் அடியெடுத்த வைத்த இவர் கடந்த 2011ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.

சோகிப் அக்தார் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவருடைய டிவிட்டில் அவர் தன்னை தானே டான் என்று கூறியுள்ளார். மேலும் அதற்காக நான் சந்தோஷமும், மற்றவர்களை துன்புறுத்தியதும் இல்லை என்று கூறியுள்ள அவர் என் ரசிகர்களுக்காகாவும், நாட்டு மக்களுக்காக மட்டுமே ஓடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவை தொடர்ந்து 2003ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சச்சின் இவரது பந்துவீச்சை துவம்சம் செய்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். மேலும் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் இருந்த கிரிக்கெட்டில் என்றும் தற்பெறுமை, வீண்வாதம் போன்றவை கூடாது என்றும் பதிவிட்டு அவரின் டிவிட்டிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 
கிரிக்கெட்டில் சோகிப் அக்தர் என்ன தான் திறமையும், சாதனையும் கொண்டிருந்தாலும் தன்னடக்கம் மிகவும் தேவை என்பதை அவரின் இந்த டிவிட் தெரிய வைத்துள்ளளது. 

Classic Right sidebar சோகிப் அக்தார், சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட், Sohaib Akthar, sachin tendulkar, Cricket விளையாட்டு சோகிப் அக்தார், சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட், Sohaib Akthar, Sachin Tendulkar, Cricket 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yiyx3M
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment