புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள 800 பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள இடத்தை நிரப்பாமல் இருப்பதாக, அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பல்வேறு உறுப்பினர்கள் பேசினர்.
இதன் பயனாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாநிலத்தில் உள்ள 800 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, பணி நியமனங்கள் நேரடித்தேர்வு மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
Classic Right sidebar புதுச்சேரி, அரசுத்துறை, காலிப் பணியிடங்கள், Puducherry, Government Job இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2E66k6z
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment