Monday, October 1, 2018

ஜாதி ஆணவத்தை வெளிச்சம் போட்டு காட்டும், ‘பரியேறும் பெருமாள்’...!

ஜாதி ஆணவத்தை வெளிச்சம் போட்டு காட்டும், ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் போதிய திரையரங்குகள் ஒதுக்கப்படாதது திரைப்படத் துறையினரிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ரஜினிகாந்தின் கபாலி, காலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை, அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தூத்துக்குடியைக் கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படம், ஜாதிய ஏற்றத் தாழ்வுகளையும், ஜாதி ஆணவத்தைப் பற்றியும் விரிவாக அலசுகிறது.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும், இந்த படத்துக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்காததே பெரும் குறையாக இருப்பதாக திரைப்படத் துறையினரே சுட்டிக்காட்டும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், விக்னேஷ் சிவன், நடிகர் சித்தார்த் போன்ற சினிமாப் பிரபலங்கள்,‘அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது’ என சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ பட விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

"தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை.

இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட. மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் காட்சிகள் உயரும்!". என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar ஜாதி ஆணவம், பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள், தமிழ் சினிமா, Kollywood, Tamil Cinema, Pariyerum Perumal, Caste சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xRazgD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment