Wednesday, October 3, 2018

இந்தோனேசியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சுலவேசி தீவை மிரட்டும் எரிமலை

இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில், கடந்த 29-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டி டங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாகின.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400ஐ எட்டியுள்ளது. இந்த இயற்கை பேரிடர் தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள்,  சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சோபூடன் எரிமலை, இன்று காலை முதல் வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது.

எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது. இந்த சாம்பல் விமான என்ஜின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்  அப்பகுதியில் விமானங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Classic Right sidebar இந்தோனேசியா, எரிமலை, நிலநடுக்கம், indonesia, Earth quake உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ro5HYl
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment