மஹாராஸ்டிரா நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை குழுவில் 4 வருடங்களாக பணியாற்றி வந்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஐஎஸ்ஐ உளவாளியை இந்திய பாதுகபாப்பு படையினர் கைது செய்தனர்.
பிரமோஸ் ஏவுகணை உலகில் வேகமாக செல்லக்கூடியது ஆகும். இந்தியா - ரஷ்யாவின் கூட்டு தொழில்நுட்பத்தால் இது உருவாக்கபட்ட இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பல், விமானம் மற்றும் நிலத்தில் இருந்து கூட செலுத்தப்படும்.
பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பயங்காரவாத அமைப்பின் உளவாளி கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளான். நிஷாந்த் அகர்வால் என்ற பெயருடன் அவன் இந்த பிரிவில் மூத்த பொறியாளராக பணியாற்றி வந்துள்ளான். மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த இந்திய பாதுகாப்பு படையினர் (Anti-Terrorism Squad) இவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 வருடமாக பிரமோஸ் ஏவுகணை குறித்த சிறு சிறு தகவல்களை இவன் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பிற்கு கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் பிரமோஸ் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு கடத்தப்படுவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்து வந்தது.
இதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இவன் தான் முக்கியதகவல்களை தொடர்ந்து ஐஎஸ்ஐ அமைப்பிற்கு அளித்து வந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இவன் முக்கிய தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பிற்கு கடத்தியதாக தெரிய வருகிறது. நாட்டின் முக்கிய பிரிவிலேயே பாகிஸ்தான் உளவாளி கடந்து 4 வருடங்களாக பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துளதையடுத்து நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது.
Classic Right sidebar பிரமோஸ், உளவுத்துறை, Brahmos இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ynojiN
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment