Monday, October 8, 2018

கோவில்களில் முறைகேடாக கட்டணம் வசூல் - மாவட்ட நீதிபதிகள் அறிக்கை

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ஆலயங்களில்  மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர். 

அந்த அறிக்கையில், பெரும்பாலான கோவில்களில் சுகாதாரம், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யவில்லை  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சர்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை என்றும் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பாரம்பரியமிக்க கலைநுட்பமான கட்டுமானங்கள் பாதுகாக்கபடவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar கோவில், தமிழகம், Temple, Tamilnadu தமிழகம் madurai high court 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ym7eFK
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment