ஆம்பூர் அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும் வழியை அடைத்ததால் கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராஜபாளையம் அருந்ததியர் காலனி சேர்ந்த சரோஜா உயிரிழந்ததாகத்தெரிகிறது. இதனிடையே அவ்வூரில் பல ஆண்டுகளாக சடலத்தை எடுத்துச்செல்லும் வழியை, அதன் நில உரிமையாளர் வெங்கடேசன் முள்வேலி அமைத்து மறைத்ததாகத் தெரிகிறது.
ஆகவே மயானத்திற்கு சடலத்தை எடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறந்தவரின் வீட்டின் முன்பும், மாதனூர் - ஓடுகத்தூர் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டு, முள்வேலி தற்காலிகமாக நீக்கப்பட்டது.
Classic Right sidebar வேலூர், Vellore தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pITYY2
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment