Monday, October 8, 2018

பேருந்து பழுது குறித்து வீடீயோ வெளியிட்ட ஓட்டுநர் பணியிடைநீக்கம்... பதில் கூறுவாரா போக்குவரத்துத்துறை அமைச்சர்..?

பிரேக், ஹாரன் உள்ளிட்ட முக்கிய கருவிகள் பழுதான பேருந்துகளை இயக்க வலியுறுத்துவதாக வீடியோ வெளியிட்ட பழனியைச் சேர்ந்த ஓட்டுநர் விஜயகுமார், காலவரையற்ற பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி இருக்கும் பிரச்சினையை, மக்கள் நலனிலும், தம்மை போன்ற ஓட்டுநர்கள் நலனிலும் அக்கறை கொண்டு பேசியததுதான் விஜயகுமாரை காலவரையற்ற பணியிடை நீக்கத்திற்கு ஆளாக்கியுள்ளது. 

அதில், பேருந்தை  இயக்கியபடியே பேசியதாக குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு பொய் எனவும் மீண்டும் அதிகாரிகளின் தகிடுதத்த முகத்திரையை அவர் கிழித்துள்ளார். 

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் சகிப்புத் தன்மை இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்தப் பிரச்சினைகளை களையாமல், அதைச் சுட்டிக்காட்டுபவர்களை பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வுக்கு தடை போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மாட்சிமை தாங்கிய அமைச்சரின் பார்வைக்கு செல்லாமலே போய்விடுகிறதோ என்னவோ...

ஓட்டை பேருந்தை ஏன் எடுத்துவருகிறீர்கள் என பயணிகளும், எடுக்காவிட்டால் டெப்போ அதிகாரிகளும் என மத்தளம் போல இருபக்கமும் அடிவாங்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேதனையை யார் புரிந்து கொள்வது...

 

Classic Right sidebar அரசு பேருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், vijayabhaskar, government bus தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PnyPxG
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment