Monday, October 1, 2018

இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விபத்தில் சிக்கி பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஒட்டிகள் அதிகம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2014 ஆண்டு, நாடு முழுவதும் 12 ஆயிரத்து 330 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 5 ஆண்டுகள் இடைவெளியில் இந்த எண்ணிக்கை 66 விழுக்காடு அதிகரித்து, 2017 ஆண்டின் புள்ளி விவரப்படி 20 ஆயிரத்து 457 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 831 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிகையிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 5 ஆயிரத்து 699 பேரும், மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 659 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Classic Right sidebar மத்திய அரசு, இந்தியா, தமிழகம், இருசக்கர வாகன ஓட்டிகள், Tamil Nadu, Two Wheeler Accidents, India தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zJmY7w
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment