Monday, October 1, 2018

சீனாவில் திரையிடப்படுகிறது தனுஷின் ‘வடசென்னை’

பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் வடசென்னை. இதில் சமுத்திரகனி, இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, ராதாரவி என பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிறது அக்.,17ம் தேதி வடசென்னை திரைப்படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், சீன நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய திரைப்பட விழாவான பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வாகி உள்ளது தனுஷின் வட சென்னை திரைப்படம். இந்த திரைப்பட விழா அக்.,11-20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சீன திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் வட சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தனுஷ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் பெருமைக்குரியதாக கருதுகின்றனர்.

இதற்கு முன்னர், இயக்குநர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்டம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

Classic Right sidebar Actor Dhanush, VadaChennai, Vetrimaran, China, Film Festival, Tamil Cinema சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NVyxBg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment