Thursday, October 4, 2018

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு மேல் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவு இன்றும் தொடர்கிறது. 

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச்சந்தைகள் 850 புள்ளிகளுக்கு மேல் சரிந்து காணப்பட்டது.

2:30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 730 புள்ளிகள் சரிந்து 35 ஆயிரத்து 245 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய குறியீட்டு எண் நிப்டி, 217 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 641 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து சரிவு வரும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளன.

Classic Right sidebar இந்திய பங்குச்சந்தைகள், Indian Stock Market, BSE, NSE, Sensex, மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IBNNxw
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment