Thursday, October 4, 2018

'ரெட்' அலர்ட் எச்சரிக்கை எதிரொலி  - தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக பொதுப்பணித்துறை முடிக்கி விட்டுள்ளது. 

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பி உள்ளதாகவும், ஏரி, குளங்களும் நிரம்பி இருப்பதால் கனமழையின் போது கரை உடைப்பு எதுவும் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. செயற் பொறியாளார்கள் தலைமையில் பொறியாளர்கள் அணையின் பாதுகாப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தின் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அணை நிரம்பினால் செயற்பொறியாளார்கள் பாதுகாப்பு கருதி நீர் திறந்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar இந்தியவானிலை, ரெட்அலர்ட், தமிழகபொதுப்பணித்துறை, சென்னை, இடி, கனமழை, வாகனஓட்டிகள், தமிழகம், கேரளா, வானிலை, chennaimeteorologicalcentre, ChennaiRains, Weather, WeatherUpdate, Rain, MeteorologicalCentre, traffic, Chennai, tnrain தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xXw6o1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment