Tuesday, October 2, 2018

5 கோடி பயனாளர்கள் தகவல் திருட்டு... ஃபேஷ்புக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு

5 கோடி பயனாளர்களின் கணக்குகளை ஹேக் செய்ய நடைபெற்ற முயற்சி குறித்து, ஃபேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது

5 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளர்களின், லாகின் விவரங்களை ஹேக்கர்கள் களவாட முயற்சித்ததாக கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.  உலகளவில் அதிக கணக்குகளை வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்திய பயனாளர்களின் விவரங்களும் திருடப்பட்டிருக்கலாம் என்றும், இது மிகவும் ஆழமான பாதிப்புள்ள பிரச்சனையாக இருக்கக்கூடும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனவே, ஃபேஸ்புக்கிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Classic Right sidebar ஃபேஷ்புக், மத்திய அரசு, facebook இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rijv6S
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment