Tuesday, October 2, 2018

'ஆடை' படத்தில் அமலாபால் உடன் நடிக்கும் யூடியுப் புகழ் பிஜிலி ரமேஷ்

அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு பிறகு அமலா பால் கைவசம் தமிழில் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, கே.ஆர்.வினோத்தின் ‘அதோ அந்த பறவை போல’, ரத்னகுமாரின் ‘ஆடை’, அறிமுக இயக்குநர் தீபு ராமானுஜம் படம், மலையாளத்தில் ப்ரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஆடை’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

பிரதீப் குமார் இசையமைக்கும் இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘V ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க யூ-டியூபில் ஃபேமஸான பிஜிலி ரமேஷ்கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Classic Right sidebar ஆடை, அமலாபால், சினிமா, amala paul, Aadai, Cinema சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P44KmF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment