புதுச்சேரியில் காவலர் இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்றதாக பெண் ஒருவர் தனது குழந்தையுடன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பானு. இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கோரிமேடு ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றிய ரமேஷ் என்பவர் ஓராண்டிற்கு முன் தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டு தற்போது பிரிந்து சென்றுவிட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள பாணு, ரமேஷின் குடும்பத்தினர் தன்னை ஆட்களை வைத்து மிரட்டுவதாக கூறியுள்ளார். அவர் மீது காவல்நிலையங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
Classic Right sidebar புதுச்சேரி, Puducherry இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2EiQk1d
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment