Monday, October 1, 2018

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை சர்வதேச விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதையொட்டி டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் , மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர். 

இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள மகாத்மாகாந்தி சர்வதேச சுகாதாரத்திட்ட மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அப்போது ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரசுடன் இணைந்து மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்ததின சிறப்பு தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். இந்த விழாவின் போது தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

 

Classic Right sidebar Mahatma Gandhi, Gandhi Jayanthi, காந்தி, மகாத்மா காந்தி இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QlDEaI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment