Monday, October 1, 2018

ஆதார் தகவல்களை நீக்குவது குறித்து 15 நாட்களில் திட்டத்தை சமர்ப்பிக்க டெலிபோன் நிறுவனங்களுக்கு உத்தரவு

ஆதார் தகவல்களை நீக்குவது குறித்து டெலிபோன் நிறுவனங்கள் 15 நாளில் திட்டத்தை சமர்ப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் 12 இலக்கம் கொண்ட ஆதார் அட்டை தகவல்களை பெறவேண்டியது கட்டாயமில்லை என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் டெலிபோன் நிறுவனங்கள் பெற்ற தகவல்களை நீக்குவது குறித்த நடவடிக்கையை ஆதார் ஆணையம் தொடங்கி உள்ளது. இதுகுறித்து ஆதார் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘டெலிபோன் சேவை வழங்கும் அத்தனை நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும்  வருகிற 15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

Classic Right sidebar India, Telecom Industry, Aadhaar Card, UIDAI, ஆதார், டெலிபோன் நிறுவனங்கள், ஆதார் ஆணையம் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P144OL
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment