Wednesday, October 3, 2018

ரூ 1 கோடி  கொடுத்து விஷாலிடம் இருந்து 96 படத்தை மீட்ட விஜய் சேதுபதி ?

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் 96 பட வெளியீட்டில் இன்று அதிகாலை பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தான் காரணம் என்பது தேரியவந்துள்ளது.

96 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் விஷாலுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை உரிய நேரத்தில் திருப்பி கொடுக்காத காரணத்தால் இன்று அதிகாலை வெளியாகவிருந்த விஜய் சேதுபதியின் 96 பட வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் தான் காரணம் என்பது தெரியவந்தது. விஷாலின் துப்பறிவாளன் பட வியாபாரத்தில் தயரிப்பாளர் நந்தகோபால் விஷாலுக்கு 4.5 கோடி கடன் வைத்துள்ளார். 

இந்த தொகையை திரும்பத்தராமல் 96 படத்தை வெளியிட கூடாது என விஷால் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அறிந்த விஜய் சேதுபதி, நந்தகோபால் உள்ளிட்ட படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி பேச முயற்சித்துள்ளனர். ஆனால் கடனை திரும்பத்தராமல் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாத நிலை ஏற்படவே படத்தின் நாயகன் விஜய் சேதுபதி நந்தகோபால் கொடுக்க வேண்டிய 4.5 கோடிக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தற்போது 1 கோடி ரூபாயை அளித்ததை தொடர்ந்து படத்தை வெளியிட அனுமதித்தனர். இதனை தொடர்ந்து 96 படம் தடைகளை தகர்த்து திரையரங்குகளில் ஒதுக்கப்பட்ட காட்சிகளில் திரையிடப்பட்டு வருகிறது.
 

Classic Right sidebar விஜய்சேதுபதி, த்ரிஷா, விஷால், நந்தகோபால், Vijaysethupathi, 96TheMovie, 96FromToday சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zPUeKq
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment