பாடலசிரியர் வைரமுத்து மீது கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரை பெண் பத்திரிகையாளர் சந்தியாமேனன் தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய திரைத்துறையில் பாலியல் குறித்த குற்றச்சாட்டை பிரபல நடிகைகள் எழுப்பி வருகின்றனர். ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி, தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் நடிகை தனுஸ்ரீ ஆகியவர்களின் பாலியல் புகார் சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வரிசையில் தமிழ் பாடலாசிரியர் வைரமுத்துவும் சிக்கி உள்ளார்.
பாலியல் வன்கொடுமயை சந்தித்தவர்கள் சிலர் அதனை வெளியில் சொல்லாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் ஹாலிவுட்டில் பாலியல் வன்கொடுமையில் சிக்கியவர்கள் இணையதளங்களில் #Metoo என்ற ஹேஸ்டேக் மூலம் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சர்ச்சை அங்கு இன்னும் முடியாத நிலையில், பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன், பெண் ஒருவருக்கு வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
On lyricist Vairamuthu pic.twitter.com/c6DwYWOO6C
— Sandhya Menon (@TheRestlessQuil) October 8, 2018
தமிழ்திரையுலகின் பல ஆயிரம் கணக்கான பாடல்களை எழுதியுள்ளவர் கவிஞர் வைரமுத்து. இவரின் பாடல்களுக்கு 7 முறை தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. வைரமுத்துவிற்கு தமிழ்சினிமாவில் தனிப்பட்ட மரியாதை இருந்து வருகிறது.
இந்நிலையில் சந்தியா மேனன் பாதிக்கப்பட் பெண் கூறியதாக தனது டிவிட்டை பதிவு செய்துள்ளார். அதில், பாடலாசிரியர் வைரமுத்து என்னிடம் 18 வயது இருக்கும் போது தவறாக நடந்து கொண்டார். அவரது கோடம்பாக்கம் வீடு மற்றும் அலுவலகத்தில் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவரின் இந்த செயலால் நிலைகுழைந்த நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.
அன்று முதல் அவருடன் தனியாகவே இருக்க எனக்கு பயமாகவே இருக்கும். கூட்டமாக இருக்கும் போது மட்டுமே அவர் அருகில் செல்வேன். வைரமுத்து பெண்களை பாலியல் ரீதியில் சீண்டுவார் என்றும் தெரிந்தும், அவருக்கு அரசியல் ரீதியாக செல்வாக்கு உள்ளாதால் யாரும் இதை வெளியில் சொல்ல மாட்டார்கள். யாரும் அவரை எதிர்ப்பதும் இல்லை என்று கூறிய அந்த பெண் தனது பெயரை கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தியா மேனனின் இந்தப் பதிவை திரைப்பிரபலங்கள் பலரும் ஷேர் செய்துள்ளனர். இந்த கருத்தின் தொடர்ச்சியாக கல்லூரி மாணவி ஒருவரும் வைரமுத்துவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியதை சந்தியா மேனன் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
One more allegation against Vairamuthu pic.twitter.com/DuRjsq0276
— Sandhya Menon (@TheRestlessQuil) October 9, 2018
அந்தப் பதிவிலும், வைரமுத்து கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாகாவும், சுதாரித்து கொண்ட அந்தப் பெண் அவரிடமிருந்து விலகி சென்றதாகாவும் கூறி உள்ளார்.
மேலும் அந்தப் பெண் தெரிவித்துள்ள தகவலில், எனது தாத்த வயதுள்ள வைரமுத்து சில நாட்களுக்கு பிறகு என்னை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை தனது மனைவியடம் சொல்ல வேண்டாம் என கேட்டு கொண்டதாக தெரிவித்தார்.
பாலியல் ரீதயாக பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியத்துடன் வெளிய சொல்ல வேண்டும் என்பதால் இதை நான் உங்களிடம் கூறினேன். எனது பெயரை மறைத்து இந்த பதிவை வெளியிடுங்கள் என்று அந்தப் பெண் கூறியதாக சந்தியா மேனன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு தமிழ்சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Classic Right sidebar வைரமுத்து, பாலியல் புகார், தமிழ் சினிமா, Vairamuthu, Tamil Cinema, MeToo சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yoULRz
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment