Tuesday, October 9, 2018

சபரிமலை விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் நுழைய அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து ஐயப்பகோவில் பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். 

இந்த வழக்குகளை அவரச வழக்காக விசாரித்து இடைக்கால உத்தரவு பிறபிக்கக்கோரி வழக்கறிஞர் மேத்யூ பாராட என்ற வழக்கறிஞர் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார். சீராய்வு மனுக்கள் நீதிபதிகளின் அறையில் விசாரிக்கப்படும் என்ற விதி இருப்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.

 

Classic Right sidebar சபரிமலை, உச்சநீதிமன்றாம், sabarimala temple, Ayyappan Temple, SupremeCourt இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NwgJYk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment