இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதம் இருக்கும் என்ற சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்ததைகவும், நடப்பாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயர வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்து 7. 4 சதவீதத்தை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல் ஆகியவற்றால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கணிப்பின் படி பொருளாதார வளர்ச்சி உயர்ந்தால், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெருவதுடன், சீனாவின் வளர்ச்சியையும் முந்தும் என்று கூறியுள்ளது.
Classic Right sidebar இந்தியா, பொருளாதார வளர்ச்சி, India, Economic growth தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IK9Z8F
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment