சிலைக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் ரன்வீர் ஷா, அவரது நண்பர் கிரண் ராவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இருப்பினும், ரன்வீர்ஷா வெளி மாநிலத்தில் இருப்பதால், அவருக்கு பதில், அவரது வழக்கறிஞர் ஆஜராவார் என்று தகவல் வெளியாகி உள்ளது , அதே நேரம், வரும் 10ம் தேதிக்கு பிறகு ரன்வீர்ஷா ஆஜராவதற்கு, கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
சென்னை சைதாப்பேட்டையில் வசிப்பவர் ரன்வீர் ஷா. நடிகரும், தொழிலதிபருமான இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அதிரடியாய் நுழைந்து சோதனை நடத்தினர். பஞ்சலோகச் சிலைகள், கற்சிலைகள் மற்றும் தூண்கள் 91 பழைமையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர்.
லாரிகளில் ஏற்றிச் செல்லும அளவிற்கு அவரது வீட்டில் அவ்வளவு சிலைகள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் கோயில்களில் இருந்தவை. மதுராந்தகம் அருகே மோகல்வாடி கிராமத்தில் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரே அதிர்ச்சியடையும் வகையில், 100 க்கும் மேற்பட்ட சிலைகள், கல் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிலைகள் யார் யாரிடம் இருக்கிறது என்ற தகவல் தங்கள் வசம் இருப்பதாக குறிப்பிட்ட ஐஜி பொன். மாணிக்கவேல் அவர்களே அவர்களே முன்வந்து ஒப்படைத்தால் நல்லது என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஆந்திராவில் கே.சி.பி சிமென்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் ஓர் இயக்குநராக ரன்வீர்ஷா இருக்கிறார். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா, சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி அவென்யூவில் இருக்கிறது. இங்கு, வெள்ளிக் கிழமை மாலை முதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டனர் . பின்னர், தோட்டப்பகுதியில் சிலைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலையடுத்து, தோட்டம் முழுவதையும் தோண்டி ஆய்வு செய்தனர் அதிகாரிகள்.
அப்போது, ஒரே கல்லிலான பழங்கால சிலைகள், மற்றும் ஐந்து அடியிலான கலை நயமிக்க சிலைகள் என மண்ணிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட சிலைகள் தோண்டி எடுத்திருக்கிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்.
சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தீனதயாளனின் நண்பரான, ரன்வீர் ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் பாதிக்கு மேல் தீனதயாளன் திருடி விற்ற சிலைகள் என்று கூறப்படுகிறது. ரன்வீர் ஷா குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் ரன்வீர் ஷா எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவருக்கு லுக்அவுட் நோட்டிஸ் விடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் செவ்வாய் கிழமை ஆஜராகும்படி ரன்வீர் ஷா, அவரது நண்பரான கிரண் ராவ் மற்றும் கிரண் ராவின் மேலாளர் தயாநிதி உள்பட 7 பேருக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். தற்போது, ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோரது வீடுகளில் சிக்கி உள்ள சிலைகளால், வழக்குகளில் பல்வேறு திருப்பங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.
Classic Right sidebar சிலைக் கடத்தல், ரன்வீர் ஷா, சம்மன், Ranvir Shah, Summon தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qzmbfd
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment