நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் இந்திய தேசிய லீக் கட்சி, திமுக தலைவர் ஸ்டாலின் , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார - பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் - பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார். நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமானத் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயலாகவே அமையும் என கூறியுள்ளார். நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Classic Right sidebar GopalArrested, NakkheeranGopal, NakkeeranGopal, gopal, நக்கீரன், நக்கீரன் கோபல், காவல்துறை, கைது, விசாரணை அரசியல்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IPzF3X
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment