சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்கக்கூட்டம் நடைபெற்றது
சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எழுத்தாளர் வே.மதிமாறன் , மனநல மருத்துவர் ஷாலினி உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலைஞருக்கு வீரவணக்கம் செலுத்தி உரைநிகழ்த்தினர்.
இடஒதுக்கீட்டுக்காக கருணாநிதி செய்த நடவடிக்கைகளை அவர்கள் பட்டியலிட்டனர்.விழாவின் இறுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A170Gi
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment