துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியதாக சில கல்வியாளர்கள் கூறியதன் அடிப்படையிலேயே ஆளுநர் தனது கவலையை தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை வேந்தர் நியமத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறுவதாக பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இதற்கு, ஆளும் அதிமுக அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆளுநர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியதாக சில கல்வியாளர்கள் தன்னிடம் கூறியதன் அடிப்படையிலேயே, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது கவலையை ஆளுநர் தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் யார் மீதும் லஞ்ச புகாரோ, ஊழல் புகாரோ ஆளுநர் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது. அதேநேரம், லஞ்ச ஒழிப்புத்துறையால் ஒரு துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ளதையும், இரு துணை வேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதையும் ஆளுநர் மாளிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை, நடப்பாண்டில் நியமிக்கப்பட்ட 9 துணை வேந்தர்களும் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Classic Right sidebar பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர், Banwarilal Purohit, TN Governor தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QDXA8P
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment