Wednesday, October 10, 2018

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள டிட்லி புயல்: வானிலை ஆய்வுமையம் ஷாக் ரிப்போர்ட்

தீவிர புயலாக மாறியுள்ள டிட்லி மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர அருகே நாளை கரையை  கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இது மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி உள்ளது.

ஒடிசா மாநிலம் கோபால்பூர்க்கு  தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலம் கலிங்கப்படினத்தில் இருந்து தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும் இப்புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த தீவிர புயலானது மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே நாளை காலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Classic Right sidebar டிட்லி, புயல், தமிழகம், வானிலை ஆய்வுமையம், cyclone, Tamilnadu தமிழகம் டிட்லி, புயல், தமிழகம், வானிலை ஆய்வுமையம், Cyclone, Tamilnadu 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IN2Y6R
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment