Monday, October 1, 2018

பிறந்தநாளன்று கர்ப்பத்தை அறிவித்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ்

ஓய்வு பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனையான மார்டினா ஹிங்கிஸ் தனது பிறந்தநாளான நேற்று தான் கர்ப்பமாக இருப்பதை டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஓய்வுபெற்ற சுவிஸ் டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் செப்டம்பர் 30ஆம் தேதியான நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கூடுதலாக தனது பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஹிங்கிஸ், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதை அனைவரிடமும் உற்சாகத்துடன் அறிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஹிங்கிஸ், முன்னாள் சுவிஸ் டென்னிஸ் அணி மருத்துவர் ஹரால்டு லீமானை (Harald Leemann) கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார்.

Classic Right sidebar டென்னிஸ், Tennis, கிராண்ட்ஸ்லாம், Grand Slam, மார்டினா ஹிங்கிஸ், Martina Hingis விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NdOYDU
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment