Wednesday, October 3, 2018

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்துப்போட்டி - பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் தனித்தே போட்டி என பகுஜன் சமாஜ் கட்சித்  தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை என்று புகார் கூறினார். காங்கிரஸ் கட்சி  மிகவும் ஆணவமாக உள்ளது என்றும் தனியாகவே பா.ஜ.கவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின்  ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை என்று தெரிவித்த மாயாவதி, பா.ஜ.கவை போன்று காங்கிரசும் பகுஜன் சமாஜ் கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

Classic Right sidebar Bahujan Samaj Party, BJP, Congress, Mayawati, Elections அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DRODY6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment