Monday, October 1, 2018

சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது - தேவசம் வாரியம் திட்டவட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது என்று திருவிதாங்கூர் தேவசம் வாரியம் திட்டவட்டடமாக தெரிவித்துள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் பத்மகுமார்,  சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் தாமதம் ஆகாது என்றும் ஒருவேளை கூடுதலாக பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நிலக்கல் - பம்பை வரை போக்குவரத்தில் பெண் பக்தர்களுக்கு 40 சதவீதம் கூடுதல் வசதி செய்து தரப்படும் என்று கூறிய அவர், விரிவாக்க பணிகளுக்காக 100 ஏக்கர் ஒதுக்கும்படி அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

பெண் பக்தர்களுக்காக தனி வரிசை ஏற்படுத்தப்படாது என்றும் பெண் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெண் காவலர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

 

Classic Right sidebar சபரிமலை, ஐயப்பன் கோயில், பெண்கள், SabariMala, women, Ayyappan Temple இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NUXEEl
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment