Wednesday, October 3, 2018

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு - விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பெட்ரோலியத்துறை அமைச்சகம் முன்பாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பகுதி மண்டலங்களின் பரப்பு 4099 சதுர கிலோ மீட்டர்.  இதில் 731 சதுர கிலோ மீட்டர் பொதுத்துறை நிறுவனத்திற்கும், மீதமுள்ள பரப்பு வேதாந்தா நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.  

இதற்காக, டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானுடன் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகத்தை முற்றுகையிட்டு, தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து, விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

 

Classic Right sidebar ஹைட்ரோ கார்பன், விவசாயிகள், போராட்டம், HydroCarbon, farmers, Protest தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ixdjnr
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment