Thursday, October 4, 2018

'ரெட் அலார்ட்' உஷார் மக்களே நீங்க செய்ய வேண்டியது இதான்....!

தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய முக்கியமானவை இது தான். 

  • உங்களுடைய செல்போன் மற்றும் பவர்பேங்க் ஆகியவற்றை மின் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பே முழு ஜார்ஜ் செய்து வைத்து கொள்ளவேண்டும்
  • குழந்தைகளுக்கு தேவையான பால், பெண்களுக்கு நேப்கின்ஸ் போன்றவற்றை அதிகம் சேமித்து வைக்க வேண்டும்
  • மழை மற்றும் வெள்ளத்தில் ஏற்படும் வியாதிகளுக்கு தேவையான மருத்துவ பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்
  • உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற தகவலை சொல்லுங்கள்
  • செல்போனில் உள்ள முக்கிய எண்களை டைரியில் குறித்து வைத்து கொண்டு அதனை தண்ணீரில் சேதடையமால் இருக்குமாறு பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும்
  • சான்றிதழ்கள் மட்டும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும்
  • 10 நாட்களுக்கு தேவைப்படும் அளவிற்கு குடிநீர், உணவுபொருட்களை  வைத்து கொள்ள வேண்டும் 
  • வாகனங்கள் தண்ணீர் மூழ்காமல் இருக்க அதனை தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுங்கள், அதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு முன்
  • வெள்ள அபாயம் ஏற்பட்டால் உடனடியாக வீட்டை வெளியேறும் அளவிற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் 
  • தரைமட்டம் மற்றும் அலமாரியில் உள்ள விலைஉயர்ந்த பொருட்களை தண்ணீரில் மூழ்காத அளவு உயரத்தில் வைக்க வேண்டும் 
  • அதிக கனமழை நேரங்களில் வீட்டின் மின்இணைப்பை துண்டித்து வைத்து கொள்ளுங்கள்
  • பேட்டரி, மெழுகுவார்த்தி ஆகியவற்றை அதிகம் வைத்து கொள்ள வேண்டும் 
  • உண்மைதன்மை இல்லா செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளாதீர்கள். இதனால் வீண்வதந்தி தவிர்க்கப்படும்
  • அரசின் உதவிமைய எண்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்கு உதவுங்கள் 
  • முக்கியமான ஒன்றை மாறவாதீர்கள், இயற்கை பேரிடர் காலங்ளில் மற்றவர் மீதான பொறாமை, வேற்றுமை கலைந்து ஒற்றுமையாக இருங்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
Classic Right sidebar ரெட் அலார்ட், தமிழ்நாடு, வானிலை ஆய்வுமையம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IDE5uq
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment