Thursday, October 4, 2018

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி - சுரேஷ் பிரபு தலைமையில் இன்று ஆலோசனை

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 44 காசுகள் சரிந்து 73 புள்ளி 77 என்ற நிலையை எட்டி உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 73 புள்ளி 34 ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 527 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 34  காசுகளாக சரிந்துள்ளதால்  மத்திய வர்த்தக துறை அமைச்சர்  சுரேஷ் பிரபு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை, நிலக்கரி அமைச்சகம், உருக்கு அமைச்சகம், பெட்ரோலியத் துறை, மருந்துகள் துறை பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது

Classic Right sidebar கச்சா எண்ணெய் விலை, India, INR, USD, Rupee Value, இந்திய ரூபாயின் மதிப்பு, டாலர், United States Dollar வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O5uQJC
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment