Thursday, October 4, 2018

அன்புமணி ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சரை பாதுகாக்க காவல்துறை முயற்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

Classic Right sidebar சிலை கடத்தல் வழக்கு, Idol Theft Case, Anbumani Ramadoss, சென்னை உயர்நீதிமன்றம், Madras HC, அன்புமணி ராமதாஸ், PMK, பாமக தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xY9FPl
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment