Tuesday, October 2, 2018

கருணாஸ்க்கு எதிராக நோட்டீஸ் ? திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

எம்.எல்.ஏ. கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வரப்போகின்ற நேரத்தில் புதிய பதவி நீக்கத்தை வைத்து ஆட்சியின் பதவி காலத்தை ஓட்டி விடலாம் என முதலமைச்சர் திட்டம் தீட்டுவதாக குற்றம்சாட்டி உள்ளார். 

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க நாடகம் நடத்தி கொண்டிருப்பதும், அவசர கதியில் எம்.எல்.ஏ. கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க முயற்சிப்பதும் கண்டனத்திற்கு உரியது என குறிப்பிட்டுள்ளார். 

தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் சீரழிந்து விட்டதாகவும், மீண்டும் மீட்டெடுக்க குடியரசு தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Classic Right sidebar திமுக, மு.க.ஸ்டாலின், கருணாஸ், DMK, M.K.Stalin, Karunas அரசியல் திமுக, மு.க.ஸ்டாலின், கருணாஸ், DMK, M.K.Stalin, Karunas 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QoJ0SO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment